Police Complaint Against Actress Saranya Ponvannan: கார் நிறுத்தத்திற்கு காட்டுத்தனமான சண்டை.. நடிகை சரண்யா பொண்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார்..!
நடிகை சரண்யா பொன்வண்ணன் தன் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக, அவரது பக்கத்து வீட்டு பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஏப்ரல் 01, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் அம்மா குணச்சித்திரம் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது சரண்யா பொன்வண்ணன் (Saranya Ponvannan) தான். கமலுக்கு ஜோடியாக நாயகன் படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து ஹீரோயின் ஆக பல படங்கள் நடித்துள்ளார். பின்னர் நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகிய இவர், ராம் படத்தின் மூலம் அம்மாவாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து கைவசம் பல படங்கள் கையில் வைத்துள்ளார். New Credit Card Rules: புதிய கிரெடிட் கார்டு விதிகள்.. கண்டிப்பாக எல்லாரும் தெரிந்து கொள்ளுங்கள்..!
இந்நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ணன், தன்னை மிரட்டி பேசியதாக சிசிடிவி ஆதாரத்துடன் அவரது பக்கத்துக்கு வீடு பெண் ஸ்ரீதேவி என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், காரை நிறுத்துவது தொடர்பாக சரண்யா தன்னிடம் சண்டை போட்டதாகவும், அப்போது என்னை கொன்றுவிடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Apr 01, 2024 03:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

