Credit Card (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 01, புதுடெல்லி (New Delhi): 2024-25ஆம் நிதியாண்டு தொடங்கிவிட்டாதால், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) வங்கிகளுக்கு உத்தரவிட்ட புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. அதன்படி எஸ்பிஐ (SBI), ஐசிஐசிஐ (ICICI), ஆக்சிஸ் (Axis), யெஸ் (Yes) என ஒவ்வொரு வங்கிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த புதிய விதிமுறையின் கீழ் அனைத்து வங்கிகளின் கிரெடிட் கார்டுகளின் பில்லிங் சைக்கிள் (Billing Cycle) மாற்றப்பட்டுவிட்டன. இந்த பில்லிங் சைக்கிள் விதியானது, வங்கிகள் அல்லது கிரெடிட் கார்டு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டவை. ஆனால் இப்போது, பில்லிங் சைக்கிளை அந்தந்த கிரெடிட் கார்டு கஸ்டமர்களே தங்களது வசதிக்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம்.

மேலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு விதிகளில் (SBI Credit Card Rules) இனி குறிப்பிட்ட கிரெடிட் கார்டுகளுக்கு வாடகை செலுத்தும் பரிவர்த்தனைகளில் (Rent Payment Transactions) ரிவார்டு பாயிண்ட்கள் நிறுத்தப்படுகிறது. Xiaomi SU7 EV Launch in India: "சியோமினா.. போன், பவர்பேங்க் மட்டும் தான் தயாரிச்சிட்டு ஓரமா இருப்போம்னு நினைச்சியா.?" புதிய காரை களத்தில் இறக்கிய சியோமி..!

ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு விதிகளை பார்க்கையில் காலண்டர் காலாண்டில் ரூ.35,000 செலவழிக்கும் கார்டுகளுக்கு காம்லிமென்டரி ஏர்போர்ட் லவுஞ்ச் அணுகல் கொடுக்கப்படுகிறது.

யெஸ் பேங்க் கிரெடிட் கார்டு மாற்றங்களை பொறுத்தவரையில், காலண்டர் காலாண்டில் ரூ.10,000 அல்லது அதற்கு மேல் செலவழிக்கும் கார்டுகளுக்கு மட்டும் இலவச உள்நாட்டு லவுஞ்ச் அணுகல் கிடைக்கும்.

ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளில் எரிபொருள், காப்பீடு மற்றும் நகைகள் போன்ற செலவுகள் மூலம் பேசிக் அல்லது எட்ஜ் ரிவார்டு பாய்ட்களுக்கு தகுதி பெற முடியாது.