Thalapathy 68: விஜய் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.. இது கண்டிப்பாக தளபதி பொங்கல் தான்..!
விஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ என்ற படத்தின் புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
ஜனவரி 15, சென்னை (Cinema News): வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் (Vijay) நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time). இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. Sachin Tendulkar Deepfake Video: சச்சின் டெண்டுல்கரின் டீப் ஃபேக் வீடியோ... அதிர்ச்சி அடைந்த கிரிக்கெட் ஜாம்பவான்..!
தளபதி விஜய் படத்தின் புதிய அப்டேட்: இந்நிலையில் தி கோட் படத்தின் போஸ்டர் சிறிது நாட்களுக்கு முன்பு வெளியானது. மேலும் பொங்கலை முன்னிட்டு தி கோட் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றினை அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு அவரது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் தளபதி பொங்கல் (Thalapathy Pongal) என்று பதிவிட்டுள்ளார். இதனால் தளபதி விஜய்யின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதோடு இந்த பொங்கல் தளபதி பொங்கல், வேற லெவல் போஸ்டர் என எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Meet #TheGOATsquad @actorvijay @actorprashanth @PDdancing #ajmal #TheGreatestOfAllTime #ThalapathyPongal #aVPhero @archanakalpathi pic.twitter.com/JXLedEcCrK
— venkat prabhu (@vp_offl) January 15, 2024
(The above story first appeared on LatestLY on Jan 16, 2024 12:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

