Sachin Tendulkar Deepfake Video (Photo Credit: @sachin_rt X)

ஜனவரி 15, புதுடெல்லி (New Delhi): இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் தான் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar). இவர் மைதானத்தில் இறங்கினாலே பந்து வீச்சாளர்கள் அனைவரும் பயத்தை கையில் பிடித்துக் கொண்டு பந்தினை வீசுவார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய பேட்டிங் மூலம் கிரிக்கெட்டில் ஆதிக்கத்தை செலுத்தியவர். மேலும் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் (Mumbai Indians) அடையாளமாக திகழ்கிறார். இவர் 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

சச்சின் டெண்டுல்கரின் டீப் ஃபேக் வீடியோ: இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் டீப் ஃபேக் வீடியோ (Sachin Tendulkar Deepfake Video) ஒன்று இணையதளம் முழுவதும் வைரலாகியது. அந்த டீப் ஃபேக் வீடியோவில் (Deepfake Video), ஒரு விளையாட்டு செயலியின் மூலம் தன் மகள் பணம் சம்பாதித்ததாகவும், அந்த செயலியை அனைவரும் பயன்படுத்துமாறும் அவர் கூறுவது போன்று எடிட் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவானது இணையதளம் முழுவதும் வைரலானது. அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் சச்சின் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதனுடன் அந்த வீடியோவையும் இணைத்துள்ளார். Viral Video: ஸ்கூட்டரில் இருந்து பறந்து விழுந்த பெண்மணி... வைரலாகும் வீடியோ...

சச்சின் டெண்டுல்கரின் பதிவு: மேலும் அவருடைய பதிவில், "இந்த வீடியோக்கள் போலியானவை. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது கவலையாக இருக்கிறது. இதுபோன்ற வீடியோக்கள் மற்றும் விளம்பரங்களை யாரேனும் பார்த்தால், உடனடியாக ரிப்போர்ட் (Report) அடிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். மேலும் நாம் அனைவரும் சமூக வலைத்தளங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். தவறான தகவல்கள் மற்றும் டீப் ஃபேக் வீடியோக்களை தடுக்க, நாம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.