The Greatest of All Time: மிரட்டும் தளபதி படத்தின் புதிய போஸ்டர்.. ஆனா போஸ்டரில் ஒரு சின்ன ட்விஸ்ட்..!
விஜய் நடிக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ என்ற படத்தின் புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 03, சென்னை (Cinema News): வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் (Vijay) நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time). இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. Taiwan Earthquake: தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. தரைமட்டமான கட்டிடங்கள்.. ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை..!
இந்நிலையில் படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியிருக்கிறது. இன்று பிரபுதேவா (Prabhu Deva) தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சூழலில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்தப் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதில் பிரபுதேவா கையில் துப்பாக்கியுடன் மாஸாக இடம்பெற்றுள்ளார். தற்போது இந்த போஸ்டரானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
(The above story first appeared on LatestLY on Apr 03, 2024 02:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

