ஏப்ரல் 03, தைப்பே (World News): தைவான் (Taiwan) நாட்டின் தலைநகரான தைப்பேவில் (Taipei City) இன்று காலை பயங்கர நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுஉள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.4 அலகுகளாக பதிவாகியுள்ளது. இந்த கடும் நிலநடுக்கத்தால் பல மாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளன. இதனால் பொதுமக்கள் உயிருக்கு அஞ்சி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் தைவானில் சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி தைவானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Viral Video: இரண்டு 'குடி'மகன்களுக்கு இடையே பெரும் சண்டை.. இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ..!
அதனைத் தொடர்ந்து ஜப்பானின் தென் பகுதி ஒகினாவா தீவையும் தைவான் நிலநடுக்கத்தால் ஏற்படும் சுனாமி அலைகள் தாக்கும் எனவும் சுமார் 8 முதல் 9 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகினாவில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தைவான், ஜப்பான் நாடுகளின் சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாடும் கடலோரப் பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளது.