Ghajini 2: அமீர்கான், சூர்யாவை வைத்து கஜினி 2 படம்.. சூர்யா வெளியிட்ட அதிரடி அப்டேட்..!

‘கஜினி 2’ படம் பேச்சுவார்த்தையில் இருப்பதாக சூர்யா தெரிவித்துள்ளார்.

Ghajini 2: அமீர்கான், சூர்யாவை வைத்து கஜினி 2 படம்.. சூர்யா வெளியிட்ட அதிரடி அப்டேட்..!
Ghajini 2 (Photo Credit: Facebook)

அக்டோபர் 24, சென்னை (Cinema News): ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா (Suriya) நடிப்பில் 2005 -ம் ஆண்டு கஜினி (Ghajini) திரைப்படம் வெளியானது. இதில் அசின், நயன்தாரா எனப் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து, கஜினி படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் ஹீரோவாக அமீர் கான் (Aamir Khan) நடித்திருப்பார். Sundari Tamil Serial: முடிவுக்கு வரும் சுந்தரி தொடர்.. ரசிகர்கள் சோகம்.!

தற்போது, சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்து சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா' படத்தின் புரமோஷன் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். அதில் பேட்டியொன்றில் ‘கஜினி 2’ நடைபெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் சூர்யா. அவர் கூறியதாவது, "கஜினி 2 குறித்து நீங்கள் கேட்டது ஆச்சரியமாக உள்ளது. கஜினி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாமா, முடியுமா என அல்லு அரவிந்த் கேட்டார். கண்டிப்பா முடியும் சார் என்றேன். அந்த படம் குறித்த பேச்சுவார்த்தை துவங்கிவிட்டது. கஜினி 2 படம் வரும்" என்றார்.

சூர்யா வெளியிட்ட அதிரடி அப்டேட்:

(The above story first appeared on LatestLY on Oct 24, 2024 03:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).