Actor Ajith Kumar's Recent Clicks: "வண்டியில் டாப் கியர்.. வயதில் ரிவர்ஸ் கியர்.." அஜித் குமாரின் கலக்கலான புதிய லுக்..!

நடிகர் அஜித் குமாரின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

Actor Ajith Kumar's Recent Clicks:
Actor Ajith Kumar (Photo Credit: @thala_speaks X)

மே 28, சென்னை (Chennai): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (AjithKumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பின்போது அஜித் கார் ஓட்டும் வீடியோ ஒன்றை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், அஜித்தும் ஆரவ்வும் காரில் பயணிக்கின்றனர். அப்போது கார் கவிழ்ந்து விழுகிறது. இந்த காட்சி கடந்த நவம்பரில் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. US Storms: அமெரிக்காவை புரட்டியெடுத்த சூறாவளி புயல்கள்; 23 பேர் பலி., இருளில் மூடிய 3 இலட்சம் வீடுகள்.!

இந்த படத்திற்கு பின், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் இணைந்துள்ளார். இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன், படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்ற நடிகர் அஜித், அங்கு ரசிகருடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

(The above story first appeared on LatestLY on May 28, 2024 10:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).