மே 28, நியூயார்க் (World News): அமெரிக்காவில் உள்ள அலபாமா, நியூயார்க், பென்சில்வேனியா, நியூ ஜெர்சி, மேரிலேண்ட் ஆகிய மாகாணங்களை கடுமையான சூறாவளி (Tornado Storm Attack) தாக்கியது. இதனால் அங்குள்ள பல நகரங்களில் மின்சாரமானது முழு அளவில் துண்டிக்கப்பட்டு, 3 இலட்சத்திற்கும் அதிகமான குடியிருப்புகளில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், 23 பேர் பெரிதாபமாக உயிரிழந்து இருக்கின்றனர். Ragi Upma Recipe: சத்தான ராகி உப்புமா செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
120 கி.மீ வேகத்துடன் சூறைக்காற்று: அந்நாட்டை பொறுத்தமட்டில் பருவக்காலங்களில் சூறாவளி தாக்குதல்கள் என்பது சாதாரணமானது என்பதால், முன் திட்டமிடலுடன் அதிகாரிகள் மற்றும் மக்கள் செயல்பட்டாலும் உயிரிழப்புகள் என்பது தொடருகின்றன. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் வீசும் பலத்த சூறைக்காற்று காரணமாக, வழியில் இருக்கும் பல வீடுகளும், கட்டிடங்களும் தரைமட்டமாக்கப்பட்டன. Lorry-Car Accident: ஆந்திராவில் லாரி மீது கார் மோதி கோர விபத்து; தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி..!
பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்கவைக்கப்படும் காரணத்தால் பெரும் உயிரிழப்புகள் என்பது அங்கு குறைவாக இருக்கின்றன.