Amitabh Bachchan (Photo Credit: @VidarbhaaTimes X)

மார்ச் 15, மும்பை (Cinema News): பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (Amitabh Bachchan) மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 81. இது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் காலில் ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. Harry Brook Withdraws from IPL 2024: இந்த ஆண்டு இந்திய ரசிகர்கள் வாயை மூட முடியாது.. சோகத்தில் இங்கிலாந்து வீரர்..!

இந்த ஆண்டில் பச்சனுக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது அறுவை சிகிச்சை இதுவாகும். கடந்த ஆண்டு ஹைதராபாத்தில் "கல்கி 2898 AD" படத்தின் படப்பிடிப்பின் போது அவருக்கு ஜனவரி மாதம், மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.