மார்ச் 15, புதுடெல்லி (New Delhi): கிரிக்கெட் ரசிகர்களால் பெருவாரியாக எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2024 (IPL 2024) போட்டிகள், இம்மாதம் 22ம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. 2024 மக்களவை தேர்தலும் நடைபெறவுள்ளதால், முதல் 22 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே ஐபிஎல் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 10 அணிகள் மோதிக்கொள்ளும் போட்டித்தொடரின் முதல் ஆட்டம் சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கும் முதல் போட்டியில், சென்னை மற்றும் பெங்களூர் (CSK Vs RCB) அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் ரூ.4 கோடி கொடுத்து வாங்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் (England cricketer Harry Brook), திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து பின்வாங்கியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் இருந்து பின் வாங்கியது ஏன் என்பது குறித்து இளம் வீரர் ஹாரி ப்ரூக் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், "ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டாம் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். டெல்லி அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்ட போது, இந்த சீசனில் விளையாட ஆர்வமாக இருந்தேன். ஆனால் சூழ்நிலை வேறு மாதிரி அமைந்துள்ளது. Soil Collapse Death: தூத்துக்குடியில் பரபரப்பு.. மண் சரிந்து விழுந்து தொழிலாளி பலி..!
கடந்த மாதம் எனது பாட்டி மறைந்துவிட்டார். சிறு வயதில் இருந்து எனது பாட்டியின் வீட்டில் வளர்ந்தவன், அவர் எப்போதும் எனக்கு ஒரு தூண் போல் நம்பிக்கை அளித்தவர். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கும் அவரே முதன்மையான காரணம். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க அபுதாபியில் இருந்து புறப்படும் போது தான் பாட்டியின் உடல்நிலை பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனால் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்தேன். தற்போது எங்களிடம் இருந்து பாட்டி மறைந்துவிட்டார். இதனால் எனது குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய சூழலில் உள்ளேன்.
அதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதே சரியான முடிவாக கருதுகிறேன். என்னிடம் இன்னும் பல ஆண்டு கால கிரிக்கெட் மீதமிருப்பதால், வரும் காலங்களில் நிச்சயம் விளையாடுவேன். இந்த கடினமான சூழலில் எனக்கு ஆதரவாக இருந்த இங்கிலாந்து நிர்வாகம் மற்றும் டெல்லி அணி நிர்வாகம் இரண்டுக்கும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.