Bijili Ramesh: "இது தான் தவறான செயல்"; மறக்க முடியுமா அந்த நிகழ்வை?; பிஜிலி ரமேஷின் நினைவுகளை பகிரும் நெட்டிசன்கள்.!

பிரபல நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஆக. 27) காலமானார்.

Bijili Ramesh:
Bijili Ramesh (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 27, சென்னை (Cinema News): யூடியூப் சேனல் ஒன்று நடத்திய பிராங்க் ஷோ மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பிஜிலி ரமேஷ் (Tamil Actor Bijili Ramesh). ரஜினி தீவிர ரசிகர் என்றும் இவரது பேச்சு மற்றும் முக பவானைகள் ரசிகர்களிடம் தனிகவனம் பெற்றது. பின் படங்களிலும் தொடர்ந்து நடிக்க துவங்கினார். எல்.கே.ஜி, நட்பே துணை, ஜெயம் ரவியின் கோமாளி என பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார். தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கவனம் பெற்றுவந்தார். Mohanlal Steps Down As AMMA President: கேரள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா.. மோகன்லால் அதிரடி அறிவிப்பு..!

பிஜிலி ரமேஷ் மறைவு: இப்படிப்பட்ட பிஜிலி ரமேஷ்க்கு குடிப்பழக்கத்தால் உடல் முழுவதும் வீங்கி, வயிற்றில் இருந்து திரவம் கசிந்து உடல்நிலை மோசமாகி இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் (Bijili Ramesh Passes Away). இவரது இறுதிசடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள இல்லத்தில் நடைபெறுகிறது. இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பிஜிலி ரமேஷின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜே சித்து உடன் எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோ:

பிராங்க் வீடியோ:

பிஜிலி ரமேஷின் பேட்டி:

குடிபோதை வேண்டாம்:

நல்ல மனிதர்:

(The above story first appeared on LatestLY on Aug 27, 2024 05:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).