Vettaiyan: ரஜினி வெறியர்களே ரெடியா?.. "இது தலைவர் தீபாவளி".. வேட்டையன் ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படமும், கங்குவா திரைப்படமும் அக்.10 அன்று ஒரேநாளில் திரைக்கு வருகிறது. இதனால் இந்த வருட தீபாவளி தலைவர் தீபாவளியாகவும் அமைந்துள்ளது.
ஆகஸ்ட் 19, சென்னை (Chennai): இயக்குனர் டிஜெ ஞானவேல் (TJ Gnanavel) இயக்கத்தில், லைகா (Lyca Productions) ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடித்து உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன் (vettaiyan). இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சிறப்பு தோற்றத்தில் ஹிந்தி சூப்பர்ஸ்டாராக கவனிக்கப்படும் அமிதாப் பச்சனும் (Amitabh Bachchan) நடித்து வருகிறார். மேலும், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். UFO Sightings: அச்சச்சோ.. ஏலியன் வந்திருச்சு.. உள்ளூர் மக்கள் பகீர் குற்றசாட்டு.. அதிர்ச்சி தகவல்.!
அக்.10 வேட்டையன் தீபாவளி:
கடந்த மார்ச் 2023 ஆம் ஆண்டு ரஜினியின் 170வது திரைப்படமாக அறிவிக்கப்பட்ட வேட்டையனின் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், திருநெல்வேலி, சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் அதிரடியாக நடைபெற்று வந்தன. படத்தின் இசையமைப்பு பணிகளை அனிருத்தும், ஒளிப்பதிவு பணிகளை எஸ்.ஆர் கதிரும், எடிட்டிங் பணிகளை பிலோமின் ராஜும் மேற்கொண்டுள்ளனர். 2024 தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று பட குழு வேட்டையன் திரைப்படம் 10 அக்டோபர் 2024 அன்று உலகளவில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. National Film Awards: 70வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பு; பொன்னியின் செல்வன், கே.ஜி.எப், காந்தாரா படங்கள் தேர்வு.!
வேட்டையன் வெர்சஸ் கங்குவா:
ரூபாய் 160 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், தமிழ் மொழி மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. நடிகர் ரஜினிகாந்தின் 2023 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, இப்படத்தில் இடம்பெற்ற ஒரு நிமிட தீம் பாடல் காட்சி ஒன்றும் வெளியாகியிருந்தது. படத்தின் துணை கதாபாத்திரங்களில் சிங்கம்புலி, ரக்சன், ரமேஷ் திலக், ராவ் ரமேஷ், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, ரோகினி, அபிராமி, ரம்யா சுப்ரமணியன் உட்பட பலரும் நடித்துள்ளனர். அதே நாளில் சூர்யாவின் நடிப்பில் மிரட்டலாக உருவாகியுள்ள கங்குவா (Kanguva) திரைப்படமும் திரைக்கு வருகிறது. இதனால் தீபாவளியை முன்னிட்டு 10 அக் 2024 அன்று இரண்டு படங்களும் வெளியாகுவது, திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
Target locked 🎯 VETTAIYAN 🕶️ is set to hunt in cinemas worldwide from OCTOBER 10th, 2024! 🗓️ Superstar 🌟 as Supercop! 🦅
Releasing in Tamil, Telugu, Hindi & Kannada!#Vettaiyan 🕶️ @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran… pic.twitter.com/WJi2ZvpX8Z
— Lyca Productions (@LycaProductions) August 19, 2024
(The above story first appeared on LatestLY on Sep 04, 2024 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

