UFO (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 18, கலிபோர்னியா (World News): நாம் வாழும் பூமி போல வேற்றுகிரகங்கள் (Planets) உள்ளதா, அதில் வேற்றுகிரகவாசிகள் (Aliens) உயிர் வாழ்கின்றனரா? அவர்கள் பூமியில் (Earth) இருக்கிறார்களா? அவர்களின் தொழில்நுட்பம் (Technology) என்ன? என்பது குறித்த பல்வேறு ஆய்வுகள் சர்வ்தேச அளவில் விண்வெளித்துறையில் (Space Research) ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒவ்வொரு நாடுகளாலும் எதிர்காலத்தின் பாதுகாப்பு கருதி மறைமுகமாக மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், இன்று வரை எந்த நாடும் ஏலியன்கள் குறித்த தகவலை தெரிவித்தது இல்லை. அமெரிக்காவை பொறுத்தமட்டில் தொடக்கத்தில் இருந்து அங்கு ஏலியன்கள் குறித்த ஆராய்ச்சி நடந்து வருகிறது என்றும், அங்குள்ள மக்கள் ஏலியன்கள் பறக்கும் தட்டை பார்த்ததாகவும் கூறி வருகின்றனர். சிலர் தங்களை ஏலியன்கள் கடத்திச்சென்று சோதனை செய்து பின் பூமியில் விட்டதாகவும் கூறுகிறார்கள். ஆனால், சமீபகாலமாக அமெரிக்காவின் உளவுத்துறை, வான் ஆராய்ச்சி, இராணுவம் உட்பட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய முக்கிய அதிகாரிகளும் ஏலியன்கள் குறித்த பேச்சுக்களை முன்வைத்துள்ளனர். WhatsApp-GIPHY Partnership: வாட்ஸ்அப்பில் GIPHY ஸ்டிக்கர்ஸ் அறிமுகம்.. பயனர்களுக்கு அதிரடி அறிவிப்பு..! 

பாவா இவாங்காவின் கூற்று பலிக்குமா?

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், லஞ்காஸ்டர் (Lancaster), பால்ம்டேல் (Palmdale) பகுதியில் நேற்று உள்ளூர்வாசிகளால் பறக்கும் தட்டுகள் எனப்படும் யுஎப்ஓ (UFO) தங்களின் வீடுகளுக்கு பின்புறம் உள்ள காலி மைதானத்தில் இருந்து புறப்பட்டு சென்றதாகவும், 6 க்கும் மேற்பட்ட பறக்கும் தட்டுகளை தாங்கள் கண்டோம் என்றும் கூறியுள்ளனர். இதனால் மீண்டும் ஒருமுறை ஏலியன் தொடர்பான ஐயம் எழுந்துள்ளது. ஏற்கனவே எதிர்கால கணிப்பாளராக சர்வதேச அளவில் கவனிக்கப்படும் பாபா இவாங்கா, தனது குறிப்பேட்டில் 2024ம் ஆண்டு வேற்றுகிரகவாசிகள் நடமாட்டம் என்பது மக்களுக்கு வெளிப்படையாக தெரியவரும். பல நாட்டு அரசும் ஏலியன் குறித்த தகவலை உறுதி செய்வார்கள் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டு: