Sonu Sood Visit Kumari Aunty Eatery (Photo Credit: @ChotaNewsTelugu X)

ஜூலை 05, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், மாதப்பூர், மாவட்டம், கொஹினுர் ஐடி வளாகத்தில் சாலையோர உணவகத்தை நடத்தி வருபவர் சாய் குமாரி. இவர் யூடியூபில் தனது கடை குறித்த வீடியோ பதிவு செய்து பிரபலமான பெண்மணி ஆவார். இதனால் அங்குள்ள வட்டாரங்களில் குமாரி ஆன்டி கடை என்றால் மிகவும் பிரபலமான ஒன்று ஆகும்.

மெரினாவில் சுந்தரி அக்கா போல, ஹைதராபாத்தில் குமாரி ஆன்டி:

குறைந்த விலையில் சைவ-அசைவ வகை உணவுகளில் பல்வேறு வகைகளை பரிமாறி வழங்கும் குமாரியின் கடைக்கு தினமும் ஆயிரக்கணக்கில் வாடிக்கையாளர்கள் வந்து சாப்பிட்டு செல்வது வழக்கம் ஆகும். அவர் பதிவிடும் விடியோவுக்கும் தொடர்ந்து பல தரப்பில் இருந்து ஆதரவும் குவிந்தது. இந்நிலையில், நடிகர் சோனு சூட் குமாரி ஆன்டி கடைக்கு சென்றுள்ளார். Rahul Gandhi on Hathras Stampede: உபி.யில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த விவகாரம்; நேரில் சென்று ஆறுதல் கூறிய ராகுல் காந்தி.! 

கொரோனா காலத்தில் செய்த கொடைகள்:

தன்னால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என எண்ணம் கொண்ட நடிகர் சோனு சூட், பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், கொரோனா காலத்தில் ஒருவேளை உணவுக்கு போராடிய நபர்கள் முதல், வெளிநாட்டில் தவித்த இந்திய மாணவர்கள், வேலையாட்கள் வரை பலருக்கும் நேரடியாக உதவி செய்தார். அவர்கள் தாயகம் திரும்ப பெரும் காரணமாகவும் அமைந்தார்.

குமாரி ஆன்டி மகிழ்ச்சி:

திரைத்துறையில் தான் சம்பாதித்த வருமானங்களை கையில் எண்ணிப்பார்க்காமல் வீதியில் இறங்கி வந்து உதவி செய்து நன்மதிப்பை பெற்றார். இதனிடையே, தற்போது நடிகர் சோனு சூட், குமாரி ஆன்டியின் கடைக்கு சென்று இருக்கிறார். இதனால் கடை வளாகம் உள்ள பகுதியில் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் சிறிது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு இருக்கின்றனர்.