Baltimore Bridge Collapse (Photo Credit: @gregjstoker X)

ஏப்ரல் 02, மேரிலேண்ட் (World News): அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ளது பல்டிமோர் நகரம். இங்கு பாயும் படாப்ஸ்கோ ஆற்றில் இருந்து 185 அடி உயரத்தில் அமைந்துள்ள ஃபிரான்சிஸ் ஸ்காட் (Francis Scott) மேம்பாலம் 1977ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அமெரிக்க தேசிய கீதத்தை எழுதியவரான ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ நினைவாக இந்த மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் மொத்த நீளம் சுமார் 8,600 அடி (2,600 மீட்டர்). இந்த பாலமானது இரண்டு முக்கிய நகரங்களை இணைக்கிறது. ஆதலால், அந்த பாலத்தில் எப்போதுமே வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். வருடத்திற்கு சுமார் 11 மில்லியன் வாகனங்கள் இதை கடக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிங்கப்பூர் கொடியுடன் கூடிய டாலி என்ற பெயரிலான பெரிய சரக்கு கப்பல் ஒன்று பால்டிமோர் வழியே, இலங்கையின் கொழும்பு நகருக்கு சென்று கொண்டிருந்தது. 300 மீட்டம் நீளம் கொண்ட இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் இருந்த மாலுமிகள் உள்பட அனைத்து பணியாளர்களும் இந்தியர்கள் ஆவர். இந்த கப்பல் மார்ச் 27 அன்று திடீரென பாலத்தின் மீது மோதி விபத்து (Bridge Collapse) ஏற்பட்டது. இதில், அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட கார்கள் ஆற்றுக்குள் விழுந்தன. எனவே அந்த ஆறு முழுவதும் கப்பல்கள் மூலமாகவும், படகுகள் மூலமாகவும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. KPY Bala Gifted Auto: "சமோசா விற்றது போதும்.. இனி ஆட்டோ ஓட்டுங்க.." என ஊக்கம் கொடுத்த கலக்கப்போவது யாரு பாலா..!

விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், டாலி சரக்கு கப்பலில் இரண்டு முறை விளக்குகள் முற்றிலுமாக அணைந்து பின் எரிந்துள்ளன. இதில் இருந்து கப்பலுக்கு வரும் மின்சாரத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் எனவும், இதனால் கப்பலின் கண்ட்ரோலை கேப்டன் இழந்திருக்கலாம் எனவும் காவல் துறை தங்களது விசாரணையின் மூலம் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் கப்பலை சுற்றி இரும்பு பாகங்கள் சூழந்து இருப்பதால் அவற்றை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கப்பலில் உள்ள 22 இந்தியர்கள், 7 நாட்களாக வெளி உலக தொடர்பின்றி தவித்து வருகின்றனர்.