Thug Life Update: அருள்மொழிவருமன் போனா என்ன.. அதான் அருண் விஜய் இருக்கார்ல.. தக் லைஃப் படத்தின் புதிய அப்டேட்..!
தக் லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதையடுத்து அவருக்குப் பதில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 01, சென்னை (Cinema News): ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த ரவி, தனது அருமையான நடிப்பால் ஜெயம் ரவியாக (Jayam Ravi) உருவெடுத்தார். தொடர்ந்து தன் அண்ணனுடன் பல்வேறு படங்களில் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தார். கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனில், அருள்மொழிவருமனாக நடித்து அனைவரின் மனதையும் வென்றார். ஆனால் அதன் பின் வெளியான படம் எதுவும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
சொல்லப்போனால் நீண்ட காலமாக வெற்றி படத்தை கொடுக்காமல் உள்ளார். பூமி படத்தில் ஆரம்பித்த தோல்வி இறைவன், அகிலன், சைரன் என்று அவரை படுத்தி எடுத்து வருகிறது. பொன்னியின் செல்வன் என்னதான் வெற்றி படமாக இருந்தாலும், அதில் பல நடிகர்கள் நடித்ததினால், அவரின் தனிப்பட வெற்றியாக அது பார்க்கப்படுவதில்லை. Thief Steals Bicycle: "என்ன தான் பழைய பொருள திருடுனாலும்.. புதிய டெக்னாலஜில மாட்டிக்கிட்டியே பங்கு.." வைரலாகும் வீடியோ..!
தக் லைஃப்: தொடர்ந்து இயக்குநர் மணிரத்னமும் கமல்ஹாசனும் இணையும் படமான தக் லைஃப் (Thug Life) படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருந்தார். ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் ஈடுபட்டிருப்பதால் தேர்தல் முடிந்தபிறகு தன இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் இப்போது ஜெயம் ரவி இப்படத்திலிருந்து விலகியுள்ளார். மேலும் அவருக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் அருண் விஜய் (Arun Vijay) நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அருண் விஜய் பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(The above story first appeared on LatestLY on Apr 01, 2024 05:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

