Cannes Film Festival 2024: "அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே.." கையில் கட்டுடன் வந்து போட்டோக்கு போஸ் கொடுத்த உலக அழகி ஐஸ்வர்யா ராய்..!

77ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது.

Cannes Film Festival 2024:
Aishwarya Rai Bachchan (Photo Credit: @SaruKeKhayal X)

மே 17, கேன்ஸ் (Cinema News): 77ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவானது (Cannes Film Festival) மே 15ந் தேதியில் இருந்து இம்மாதம் 25ந்தேதி வரை நடைபெறுகிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் 1946ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும், இவ்விழா நடைபெற்றுவருகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆடம்பரமான ஃபேஷன் மற்றும் நேர்த்தியான ஆடைகளை உலகிற்கு காட்டும் ஒரு இடமாக மாறியுள்ளது. இவ்விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பது தான் தற்போது முக்கியமான நிகழ்வாக மாறியுள்ளது.

இவ்விழாவுக்கு நடிகை, நடிகர்கள் மட்டும் அல்லாமல் திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பிரபலங்கள் வருகின்றனர். 77வது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் பச்சன், அதிதி ராவ் ஹைதாரி, சோபிதா துலிபாலா, தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். Tenkasi Student Selected For National Skating Competition: தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஸ்கேட்டிங் போட்டி.. மாணவன் உதவி கேட்டு கோரிக்கை..!

அதன்படி கேன்ஸ் விழாவில் கலந்துகொள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் (Aishwarya Rai Bachchan) தனது மகள் ஆராத்யா உடன் சென்றிருக்கிறார். கையில் அடிபட்டு கட்டு போட்டிருந்தாலும் அதோடு கேன்ஸ் பட விழாவின் ரெட் கார்பெட்டில் அழகிய ஏஞ்சலாக ரேம்ப் வாக் வந்துள்ளார் ஐஸ்வர்யா ராய். கருப்பு நிற பீகாக் கவுன் அணிந்து அவர் ரேம்ப் வாக் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

(The above story first appeared on LatestLY on May 17, 2024 01:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).