AK Gifts Bike To Arav: 35 லட்சத்தில் புது பைக்.. அதும் அவர் கையிலிருந்தா.. ஆரவுக்கு பரிசளித்த தல அஜித்..!

நடிகர் அஜித் தற்போது 'விடாமுயற்சி' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஆரவுக்கு 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் ஒன்றை பரிசளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

AK Gifts Bike To Arav: 35 லட்சத்தில் புது பைக்.. அதும் அவர் கையிலிருந்தா.. ஆரவுக்கு பரிசளித்த தல அஜித்..!
AK Gifts Bike Arav (Photo Credit: @ChennaiTimesTOI X)

ஏப்ரல் 10, சென்னை (Cinema News): தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (AjithKumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இப்படத்தின் படப்பிடிப்பின்போது அஜித் கார் ஓட்டும் வீடியோ ஒன்றை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், அஜித்தும் ஆரவ்வும் காரில் பயணிக்கின்றனர். அப்போது கார் கவிழ்ந்து விழுகிறது. இந்த காட்சி கடந்த நவம்பரில் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. Ramadan Announcement in Tamil Nadu: தமிழ்நாட்டில் பிறைக்காக காத்திருக்கும் ரமலான் தேதி.. தமிழகத்தில் ரமலான் பண்டிகை எப்போது?.!

தற்போது மற்றொரு விஷயம் வைரலாகி வருகிறது. நடிகர் ஆரவ் (Ajith Gifts Bike) அஜித்தின் பைக் ரைட் குழுவில் சேர்ந்து அவர்களுடன் தற்போது பைக் ரைடிங் செய்து வருகிறார். பொதுவாக தன்னுடன் இருப்பவர்களை நன்றாக பார்த்துக்கொள்ளும் நடிகர் அஜித், நடிகர் ஆரவ்விற்கு ரூ. 35 லட்சம் மதிப்புள்ள சூப்பர் பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

(The above story first appeared on LatestLY on Apr 10, 2024 02:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).