ஏப்ரல் 10, சென்னை (Chennai): இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ரமலான் (Ramadan) உள்ளது. இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை கொண்டாடுப்படுவதற்கு முன்பு இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி தமிழ்நாட்டில் இன்று பிறை தென்படாததால் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் (Chief Minister Kazi Salahuddin Mohammed Ayub) அறிவித்துள்ளார். World Homeopathy Day 2024: எத்தனை மருத்துவமனை வந்து இருந்தாலும் காந்திக்கு இதான் பேவரைட்.. உலக ஹோமியோபதி தினம்..!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹிஜ்ரி 1445 ரமலான் மாதம் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆங்கில மாதம் 09-04-2024 தேதி அன்று மாலை ஷவ்வால் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் வியாழக்கிழமை ஆங்கில மாதம் 11-04-2024 தேதி அன்று ஷவ்வால் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப் படிநிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஈதுல் பித்ர் வியாழக்கிழமை 11-04-2024 தேதி கொண்டாடப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.