Actor Ajith Flies To Azerbaijan: தீபாவளிக்கு வெடிக்க தயாராகும் விடாமுயற்சி.. ஷூட்டிங் செல்லும் போது அஜித் எடுத்த புகைப்படம் வைரல்..!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Actor Ajith Flies To Azerbaijan: தீபாவளிக்கு வெடிக்க தயாராகும் விடாமுயற்சி.. ஷூட்டிங் செல்லும் போது அஜித் எடுத்த புகைப்படம் வைரல்..!
AK (Photo Credit: @ThalaAjith_FC X)

ஜூன் 20, சென்னை (Chennai): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (AjithKumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இப்படத்தின் படப்பிடிப்பின்போது அஜித் கார் ஓட்டும் வீடியோ ஒன்றை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், அஜித்தும் ஆரவ்வும் காரில் பயணிக்கின்றனர். அப்போது கார் கவிழ்ந்து விழுகிறது. இந்த காட்சி கடந்த நவம்பரில் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. Youngsters Dangerous Stunt Video: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக உயிரைப் பணயம் வைக்கும் ஜோடி..!

குட் பேட் அக்லி: இந்த படத்திற்கு பின், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் இணைந்துள்ளார். இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன், படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.

விடாமுயற்சி ரிலீஸ்: இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்காக படக்குழு ஏற்கெனவே அஜர்பைஜான் சென்றுவிட்டது. நடிகர் அஜித்குமார் நேற்று புறப்பட்டுச் சென்றார். அப்போது விமான நிலையத்தில் நடிகர் அஜித், ரசிகருடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்தகைய சூழலில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, விடாமுயற்சி திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jun 20, 2024 01:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).