Amaran Release: தல அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்.. அமரன் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படம் எப்போது வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.

Amaran Release: தல அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்.. அமரன் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு..!
Amaran (Photo Credit: @magizhmandram X)

ஜூலை 17, சென்னை (Cinema News): மாவீரன் மற்றும் அயலான் வெற்றியை தொடர்ந்து, தற்போது சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) அவரது 21வது படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அமரன் (Amaran) என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார். புவன் அரோரா, ராகுல் போஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். Care and Management of Dairy animals: கார்காலத்தில் கால்நடைகளுக்கும் கவனம் தேவை.. விபரம் உள்ளே..!

அமரன் ரிலீஸ்: எப்போதும் நகைச்சுவை பாணியில் நடிக்கும் சிவகார்த்திகேயன் இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் ஆனது இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் என்பவரின் வாழ்க்கை வரலாறு ஆகும். ஆனால் இது பயோபிக் படம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. இந்நிலையில் அமரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. மேலும் தல அஜித்தின் விடாமுயற்சி படமும் தீபாவளி தான் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தல மற்றும் எஸ்கே படங்கள் நேரடியாக பாக்ஸ் ஆபிஸில் மோத உள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).