ஜூலை 17, புதுடெல்லி (New Delhi): மனிதனுக்கு மட்டும் அல்ல, கால்நடைகளுக்கும் இது, பல வகையான நோய்களை உண்டாக்கும் காலமே. கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மழைக்காலத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். கால்நடைகளுக்கு வைக்கும் தண்ணீர், தீவனம், மற்றும் உணவுகள் மாசுபடாமலும் , அதிக குளிர்ச்சி இல்லாமலும் இருப்பது அவசியம்.
கார்காலத்தில் கால்நடைகளுக்கும் கவனம் தேவை: குளிர் அதிகம் இருப்பதால் கால்நடைகளின் எதிர்ப்புத் திறன் குன்றும். அதனால் அவற்றிக்கு எதிர்ப்புசக்தி அதிகம் நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும். உலர் தீவனம் மற்றும் வைக்கோல் செரிக்கும் போது அதிக வெப்பம் வெளியாவதால் அவைகளின் உடல் வெப்பநிலை சீராகிறது. ஆநிரைகளை பனி மற்றும் ஈரப்பதம் இருக்கும் புற்கள் நிறைந்த பகுதியில் மேய்க்கக் கூடாது. இதை உண்பதால் செரிமானக் கோளாரு ஏற்பட்டு வயிறு உப்பசம் ஏற்படும். மேலும் குடற்புழுக்கள் வர வாய்ப்புள்ளது. Royal Enfield Guerrilla 450 Launch: ராயல் என்பீல்டு கொரில்லா 450 வெளியீடு.. அதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?!
புதிதாக முளைத்த இளம் புற்களை உண்பதால் வெள்ளாடுகளுக்கு துள்ளுமாரி என்னும் நோய் ஏற்படும். தீவனங்களை, மழைச்சாரல் மற்றும் தண்ணீர் போன்றவை படாதவண்ணம் வைக்க வேண்டும். ஈரப்பதம் அதிகம் இருப்பதால் தீவனங்களில் பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. குளிர்காற்று வீசுவதால் கன்றுகளுக்கும் ஆட்டுக்குட்டிகளுக்கும் நுரையீரல் பாதிப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அதனால் இவைகளை ஈரம் பதம் இல்லாத இடங்களிலும் உலர் வைக்கோல் படுக்கை அமைத்து படுக்க வைக்கலாம். கொட்டகைகளை சுற்றி தார், படுதா அல்லது சாக்கு போன்றவையை வைத்து மறைப்பு கட்டி கால்நடைகளின் இருப்பிடத்தை கத கதப்பாக வைக்கவேண்டும்.
ஈ, கொசுக்களை தடுக்க: கால்நடைகள் இருக்கும் இடங்களுக்கு பொதுவாகவே ஈ, கொசு போன்றவை வரும் மழைக்காலங்களில் இவற்றின் வருகை அதிகமாகும் இதனுடன் வண்டு, மற்றும் விஷப்பூச்சிகள் என அனைத்தும் படையெடுக்கும். இவற்றைத் தடுக்க ஒரு இரும்புபாத்திரத்தில் பச்ச வேப்பிலை, நொச்சியிலை, தும்பையிலை ஆகியவற்றில் காலை, மாலை என இருவேளைகளில் தீ வைத்து, புகை மூட்டம் போடலாம். இந்த புகை 2 மணி நேரத்திற்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பகல் நேரங்களில் சோற்றுக்கற்றாளை , மற்றும் ஓமம் இலையை அரைத்து மாடுகளுக்கு தடவலாம். சோற்றுக்கற்றாளைக்குக் கொசுக்கள் வராது. இது ஆடுகளுக்கு பயன்படுத்தக் கூடாது. Aadi Memes: தொடங்கியது ஆடி மாதம்.. சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் கலக்கல் மீம்ஸ்.! கூழ் முதல் குமுறல் வரை..!
முதலுதவி: கால்நடைகளுக்கு பாம்பு, தேள் போன்ற விஷக்கடியிலிருந்து முதலுதவியாக 5 வெற்றிலை, 5மிளகு, 5 கிராம் உப்பு போன்றவற்றை அரைத்து நாக்கில் தடவ வேண்டும். இவைக்கு விஷத்தை முறிக்கும் தன்மை இருக்கிறது. மேய்சலின் போது ஈரமான தரையில் நிற்பதால் கால்நடைகளுக்கு, குறிப்பாக ஆடுகளுக்கு, கால்களில் புண்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதற்கு சிறிது துளசி,குப்பைமேனி, 4 பற்கள் பூண்டு, 10கிராம் மஞ்சத்தூள் ஆகியவற்றை அரைத்து 100 மிலி நல்லெண்ணையில் வதக்கி எடுத்து ஆறவைத்துக் கொள்ள வேண்டும். பின் உப்பு மஞ்சள் கலந்த நீரில் கால்களில் உள்ள புண்ணை கழுவி விட்டு, ஈரத்தைத் துடைத்து விட்டு இந்த மருந்தை தடவ வேண்டும்.
கால்நடைகள் உள்ள கொட்டகையில் மழைநீர், தண்ணீர் புகாதமாறு உயரமாக கொட்டகை அமைக்க வேண்டும். நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க அடிக்கடி கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். ஒரு கிலோ சுண்ணாம்புக்கல்லை 10 லிட்டர் சுடு தண்ணீரில் போட்டு தெளிந்தவுடன், சுண்ணாம்பு நீரை 1லிட்டர் எடுத்து அதனுடன் 50 கிராம் மஞ்சள் தூள் கலந்து கால்நடைகள் இருக்கும் கொட்டகையில் தெளிக்கவேண்டும்.