Amaran Trailer: "அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே" வெளியானது அமரன் டிரைலர்!
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.
அக்டோபர் 23, சென்னை (Cinema News): மாவீரன் மற்றும் அயலான் வெற்றியை தொடர்ந்து, தற்போது சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) அவரது 21வது படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அமரன் (Amaran) என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி முதன்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார். புவன் அரோரா, ராகுல் போஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். Oviya Video Leak Controversy: ஓவியா அந்தரங்க வீடியோ லீக் செய்தது யார்? பயில்வான் கூறிய பரபரப்பு தகவல்.!
அமரன் ரிலீஸ்: எப்போதும் நகைச்சுவை பாணியில் நடிக்கும் சிவகார்த்திகேயன் இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் ஆனது இந்திய ராணுவ வீரரான மேஜர் முகுந்த் என்பவரின் வாழ்க்கை வரலாறு ஆகும். ஆனால் இது பயோபிக் படம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. இந்த படமானது தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. ட்ரைலரில் ஆக்சன் காட்சிகள் மற்றும் பேசும் வசனங்கள் என அனைத்திலும் சிவகார்த்திகேயன் மிரட்டலாக நடித்து இருக்கிறார். அத்துடன், காதல் காட்சிகளும் சீதாராமன் படத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இருக்கிறது.
அமரன் டிரைலர் நாளை வெளியீடு:
(The above story first appeared on LatestLY on Oct 23, 2024 06:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

