Aparna Das Marriage With Actor Deepak Parambol: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தீபக்கை கரம்பிடித்த அபர்ணா தாஸ்.. வாழ்த்து தெரிவித்து வரும் ரசிகர்கள்..!
நடிகை அபர்ணா தாஸுக்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் தீபக் பரம்போலுக்கும் திருமணம் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றுள்ளது.
ஏப்ரல் 24, சென்னை (Cinema News): கடந்த 2018ல் வெளியான ‘ஞான் பிரகாஷன்’ (Njan Prakashan) படம் மூலமாக மலையாள திரையுலகில் அறிமுகமானவர் தான் அபர்ணா தாஸ் (Aparna Das). மேலும் பீஸ்ட், டாடா படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். இவருக்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் தீபக் பரம்போலுக்கும் (Deepak Parambol) திருமணம் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றுள்ளது. Ajith, Shalini's Anniversary Celebration: "உன்னை மொத்தம் நேசிக்கிறேன்.. உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்.." 24வது திருமண நாளை கொண்டாடும் அமர்க்கள ஜோடி..!
அபர்ணாவும், தீபக்கும் இணைந்து ‘மனோஹரம்’ படத்தில் நடித்திருந்தனர். இருவரின் காதலுக்கு ஆரம்ப புள்ளியாக இப்படம் அமைந்தது. இந்நிலையில், பல வருடங்களாக காதலித்து வந்தவர்களின் திருமணம் இன்று கேரளாவின் வடக்கஞ்சேரியில் நடைபெற்றது. இதில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Apr 24, 2024 03:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

