ஏப்ரல் 24, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (AjithKumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மறுபக்கம் அஜித்தும் ஷாலினியும் (Shalini) இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு மகளும், அதன் பிறகும் ஒரு மகனும் பிறந்தனர். முழுக்க முழுக்க இல்லற வாழ்வில் இருந்த ஷாலினி கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக, கணவர் அஜித், குழந்தைகளுடன் செலவிடும் நேரங்களை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். MS Dhoni Gives Hilarious Reaction to Cameraman: தோனிக்கு ஜூம் போன கேமராமேன்.. வாட்டர் பாட்டிலால் ஓட விட்ட தோனி.. வைரலாகும் வீடியோ..!

தொடர்ந்து இன்று 24வது திருமண நாளில் அடியெடுத்து வைக்கும் அஜித், ஷாலினி தம்பதியினர் சென்னை லீலா பேலஸில் (Leela Palace, Chennai) அவர்களின் இந்த முக்கிய தினத்தை கொண்டாடி வருகின்றனர். தற்போது அது சம்பத்தப்பட்ட வீடியோவானது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.