AR Rahman-Saira Banu Divorce: "எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாக தெரிகிறது" ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து.!

ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாக காதல் மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

AR Rahman-Saira Banu Divorce:
AR Rahman-Saira Banu (Photo Credit: YouTube)

நவம்பர் 20, மும்பை (Cinema News): உலகமே கொண்டாடும் இசையமைப்பாளர் ஆஸ்கர் வென்ற ஏ ஆர் ரஹ்மான் (AR Rahman). எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லக் கூடியவர். இவர் 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹிமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு விவாகரத்து: இதுகுறித்து சாய்ரா தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் (AR Rahman Divorce), திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, கணவர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளேன். உறவில் ஏற்பட்ட உணர்ச்சிப்பூர்வ முறிவுகளுக்கு பின் எடுக்கப்பட்ட முடிவு இது. ஒருவருக்கொருவர் ஆழமான அன்பைத் தொடர்ந்து வந்த போதிலும், சில முரண்பாடுகள் தங்களுக்கு இடையேயான ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கிவிட்டன. இந்த முரண்களை சரி செய்து இணைப்பை உருவாக்குவதற்கான முயற்சியில் இருவரும் தோல்வி அடைந்துவிட்டதாக உணர்கிறோம் என்று கூறப்பட்டது. Kanguva Trimmed: தொடர்ந்த எதிர்மறை விமர்சனங்கள்.. படத்திலிருந்து 12 நிமிட காட்சிகளை நீக்கிய கங்குவா டீம்..!

மனைவி சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கத்தை பதிவு செய்துள்ளார். அதில், “தங்கள் திருமணம் வாழ்வு 30 வயதை எட்டும் என்று நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாக தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தால் நடுங்கக்கூடும். இதய சிதைவுகள் மீண்டும் தங்கள் இடத்தை கண்டுபிடிக்கவில்லை என்றாலும், அர்த்தத்தைக் தேடுவதாக தெரிவித்துள்ளார். மேலும், உடைந்தவை மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும், எங்கள் தனியுரிமையை மதித்ததற்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

மனைவியை பிரிந்த ஏ ஆர் ரஹ்மான் உருக்கமான பதிவு:

(The above story first appeared on LatestLY on Nov 20, 2024 12:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).