Brother Update: ஜெயம் ரவியின் ‘பிரதர்’.. புதிய பாடல் நாளை வெளியீடு!
ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்‘ படத்தின் புதிய பாடல் நாளை மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அக்டோபர் 22, சென்னை (Cinema News): ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த ரவி, தனது அருமையான நடிப்பால் ஜெயம் ரவியாக (Jayam Ravi) உருவெடுத்தார். தொடர்ந்து தன் அண்ணனுடன் பல்வேறு படங்களில் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தார். கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனில், பொன்னியின் செல்வனாக நடித்து அனைவரின் மனதையும் வென்றார். ஆனால் அதன் பின் வெளியான படம் எதுவும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. சொல்லப்போனால் நீண்ட காலமாக வெற்றி படத்தை கொடுக்காமல் உள்ளார்.
ஜெயம் ரவி விவாகரத்து: பூமி படத்தில் ஆரம்பித்த தோல்வி இறைவன், அகிலன், சைரன் என்று அவரை படுத்தி எடுத்து வருகிறது. பொன்னியின் செல்வன் என்னதான் வெற்றி படமாக இருந்தாலும், அதில் பல நடிகர்கள் நடித்ததினால், அவரின் தனிப்பட வெற்றியாக அது பார்க்கப்படுவதில்லை. இந்த நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை எல்லாம் டெலிட் செய்தார். தொடர்ந்து அவரும் அவரது மனைவியும் விவாகரத்து பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே ஜெயம்ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக கூறி (Divorce) அறிக்கை வெளியிட்டு இருந்தார். Kanguva Second Single Yolo: கங்குவா படத்தின் யோலா பாடல் வெளியீடு.. ஸ்டைலாக ஆடும் சூர்யா.. குதுகலப்பில் ரசிகர்கள்.!
பிரதர்: மறுபக்கம் பிரதர் (Brother) என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். ராஜேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் பிரதர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, பிரியங்கா மோகன், விடிவி.கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடல் மக்காமிஷி (Makkamishi) ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நகைச்சுவை மற்றும் குடும்ப பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் பிரதர் திரைப்படம் தீபாவளிக்கு (அக்.31) வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘பிரதர்’ (Brother) திரைப்படத்தின் புதிய பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘மெதக்குது காலு ரெண்டும்’ என்ற பாடல் நாளை (அக்டோபர் 23) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
‘பிரதர்‘ படத்தின் புதிய பாடலுக்கான புதிய போஸ்டர்:
You are warmly invited to the Wedding Song Release from #Brothermovie 🎁#MedhakuthuKaaluRendum
🗓️ : 23rd October 2024
⌛ : 5️⃣PM
Venue : @thinkmusicindia ▶️#Brotherfromdiwali 🧨@actor_jayamravi@jharrisjayaraj @rajeshmdirector @priyankaamohan @bhumikachawlat… pic.twitter.com/6JtD2okYpv
— Screen Scene (@Screensceneoffl) October 21, 2024
(The above story first appeared on LatestLY on Oct 22, 2024 01:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

