Yolo (Photo Credit: YouTube)

அக்டோபர் 21, சென்னை (Cinema News): சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, பாபி டியோல், திஷா பதானி, நடராஜன், ஜெகபதி பாபு, யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், கே.எஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா (Kanguva). கேஇ ஞானவேல் ராஜா தயாரிப்பில், வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படம் உருவாகியுள்ளது. ஐமேக்ஸ் தரத்தில், ரூ.300 கோடி செலவில் உருவாகி இருக்கும் கங்குவா படத்தில், நடிகர் சூர்யா பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கங்குவா ரிலீஸ்: ஐமேக்ஸ் 3டி தொழில்நுட்ப முறையில் வெளியாகும் இப்படம், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உட்பட 38 மொழிகளில் வெளியாகிறது. சர்வதேச அளவில் கங்குவா திரைப்படம் தான், தமிழ் மொழிப்படங்களில் வெளியீடுக்கு முன்பே பலகோடி வருமானத்தை பெற்றதும் ஆகும். இந்நிலையில், கங்குவா திரைப்படம் நவம்பர் மாதம் 14 ம் தேதி வெளியாகும் என படத்தயாரிப்பு குழுவான ஸ்டுடியோ கிரீன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. Bigg Boss Tamil Season 8: சவுந்தர்யாவை கண்ணீர்விடவைத்த போட்டியாளர்கள்; மூன்றாவது வார நாமினேஷனில் அடுத்த சம்பவம்.. ப்ரோமோ உள்ளே.!

கங்குவா படத்தின் இரண்டாவது பாடல்: இந்நிலையில் தற்போது கங்கா படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. அதில் வரும் கடற்கரையில் ஸ்டைலான நடன அசைவுகளை செய்யும் சூர்யாவின் காட்சி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த பாடல் சூர்யா ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

கங்குவா படத்தின் இரண்டாவது பாடல்: