Moana 2 Trailer: சுமார் 8 ஆண்டுகள் கழித்து வரப்போகும் பிரமாண்ட அனிமேஷன் திரைப்படம்.. மோனா 2 படத்தின் ட்ரைலர் வெளியீடு..!

அனிமேஷன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘மோனா 2’ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Moana 2 (Photo Credit: YouTube)

அக்டோபர் 09, சென்னை (Cinema News): மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அனிமேஷன் திரைப்படமான மோனாவின் தொடர்ச்சியான மோனா 2 இந்த ஆண்டு நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வரவுள்ளது. 2016ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது. இதனால், இந்தப் படத்திற்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. Vettaiyan: "அமிதாப் பச்சன் முதல் பெஞ்ச் மாணவர், ரஜினி சார் கடைசி பெஞ்ச்" வேட்டையன் இயக்குநர் ஞானவேல்.!

இந்நிலையில், சுமார் 8 ஆண்டுகள் கழித்து இதன் 2ஆம் பாகம் (Moana 2) இந்தாண்டு நவம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில், வரவிருக்கும் இரண்டாம் பாகத்திற்கான டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. டேவ் டெரிக் ஜூனியர், அபிகாயில் பார்லோ மற்றும் எமிலி பியர், ஓபெடாயா ஃபோய் மற்றும் மார்க் மான்சினா ஆகியோரின் இசையுடன் இப்படம் மியூசிக்கல் படமாக வெளியாக உள்ளது.

மோனா 2 படத்தின் ட்ரைலர் வெளியீடு:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement