அக்டோபர் 08, சென்னை (Cinema News): ரஜினிகாந்த் (Rajinikanth) தற்போது வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். இவர்களுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், ஷர்வானந்த், ரமேஷ் திலக், ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். கண்டிப்பாக சோஷியல் மெசேஜுடன் படம் உருவாகும் என்று ரஜினியின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேட்டையன்: இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள் அடுத்தடுத்த பேட்டிகளையும் ரஜினியுடன் இணைந்த உற்சாகத்தையும் பகிர்ந்து வருகின்றனர். இந்த படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ரன்டைம் 2 மணிநேரம் மற்றும் 43 நிமிடங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே படத்தின் 3வது சிங்கிளும் வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் வெளியாகியுள்ள இரு பாடல்களும் அதிரடி சரவெடியாக அமைந்துள்ள நிலையில் 3வது பாடல் மெலடியாக அமைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Maharaja: மகாராஜா படத்தின் வெற்றி விழா.. இயக்குநர் நித்திலன்க்கு பிஎம்டபுள்யூ பரிசளித்த விஜய் சேதுபதி..!
இந்நிலையில் அமிதாப் பச்சனையும், ரஜினியையும் இயக்கிய அனுபவம் பற்றி பேசியிருக்கிறார் ஞானவேல். அவர் கூறியிருப்பதாவது, அமிதாப் பச்சன் சார் முதல் பெஞ்ச் மாணவர், ரஜினி சார் கடைசி பெஞ்ச் மாணவர். பச்சன் சார் முதல் நாளே நம்மை டென்ஷனாக்கிவிடுவார். என்ன சீன் இதுனு கேட்டு வாங்கி அதை படித்துப் பார்ப்பார். இது என்ன வார்த்தை வருது, இது என்ன வருது, இதில் நான் என்ன செய்ய வேண்டும் என மறுநாள் ஷூட்டிங்கிற்கு முதல் நாளே ரெடியாகிவிடுவார். ரஜினி சாரிடம் காலையில் கொண்டு போய் சீன் கொடுத்தால் கூட ஷாட்ல போயிடலாம் என்பார்.
பச்சன் சாரை பொறுத்தவரை நாம் தயாராக இருக்க வேண்டும். முதல் நாள் நமக்கு டென்ஷனாகிவிடும். நாளைக்கு சீனுக்கு இன்னைக்கு என்னை ரொம்ப டார்ச்சர் பண்றார் சார் என அவர் மேனேஜரிடம் சொன்னேன். தினமும் அவர் இந்த டிராமாவை தான் பண்ணுவார். எல்லா இயக்குநர்களும் இதே புகார் தான் தெரிவிப்பார்கள் என்றார் அவர். அமிதாப் பச்சன் கிளம்பும் போது எல்லாம் சொல்லிவிட வேண்டும். மறுநாள் வந்தால் பயங்கர தயாராக வருவார் பச்சன் சார். நல்லா படிக்கிற பசங்களோட டிராவல் பண்றது ரொம்ப கஷ்டம் என்றார்.
அமிதாப் பச்சனையும், ரஜினியையும் இயக்கிய அனுபவம் பற்றி பேசிய இயக்குநர் ஞானவேல்:
— Amuthabharathi Videos (@Videos345) October 8, 2024