Thug Life Teaser: உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. வெளியான தக் லைஃப் டீசர்..!

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு தக் லைஃப் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அடங்கிய டீசர் வெளியானது.

Thug Life Teaser: உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. வெளியான தக் லைஃப் டீசர்..!
Kamal Haasan (Photo Credit: @Instagram)

நவம்பர் 07, சென்னை (Cinema News): உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 70 ஆவது பிறந்தநாளைக் (Kamal Haasan’s 70th birthday) கொண்டாடுகிறார். நடிகர், இயக்குநர், பாடகர், நடனக்கலைஞர், சண்டைப் பயிற்சியாளர் என தனது 5 வயதில் இருந்து திரையுலகிற்கு பங்களித்து வரும் மாபெரும் கலைஞன். இப்படிப்பட்ட கலைஞனின் பிறந்தநாளை இன்று உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். Anshitha Cried: "சோஷியல் மீடியாவால் வாழ்க்கையே போச்சு" - கண்ணீருடன் கதறிய அன்ஷிதா..!

தக் லைஃப் (Thug Life): கமலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்துள்ள தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதி அடங்கிய டீசர் வெளியானது. நடிகர் கமல்ஹாசன், ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. இத்திரைப்படத்தில் நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். சில நாள்களுக்கு முன் முழுமையாகப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இறுதியாக நடிகை த்ரிஷாவின் நடனக்காட்சி ஒன்று மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதி அடங்கிய டீசர் வெளியானது. அதன்படி படமானது அடுத்த ஆண்டு  ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

வெளியான தக் லைஃப் டீசர்:

(The above story first appeared on LatestLY on Nov 07, 2024 11:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).