Anshitha Cried: "சோஷியல் மீடியாவால் வாழ்க்கையே போச்சு" - கண்ணீருடன் கதறிய அன்ஷிதா..!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அர்னவ் குறித்த சர்ச்சையில் சிக்கிய நடிகை அன்ஷிதா, பிக் பாஸ் இல்லத்தில் இருந்தவாறு தனக்கு நேர்ந்த விஷயம் குறித்து சில தகவலை பகிர்ந்துள்ளார்.

Anshitha Cried:
Anshitha Cried | Day 31 Promo | Bigg Boss Tamil Season 8 (Photo Credit: VijayTelevision X)

நவம்பர் 06, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நடப்பு சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் போட்டியாளர்களாக நுழைந்த நிலையில், ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேஷன் முறையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் எலிமினேஷன் இல்லாமல் கூடுதலாக 6 போட்டியாளர்களாக ராயன், சிவகுமார், மஞ்சரி நாராயணன், வர்ஷினி வெங்கட், ராணவ், ரியா தியாகராஜன் ஆகியோர் வைல்ட் கார்ட் முறையில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் வீட்டில் 21 பேர் இருக்கும் நிலையில், வரும் வாரங்களில் 2 எலிமினேஷன் இருக்கலாம் எனவும் தெரியவருகிறது. இந்த வார நாமினேஷனில் (Bigg Boss Tamil Today Episode), ஜாக்குலின், விஷால், ரஞ்சித், தீபக், அருண், முத்து, சாச்சனா, பவித்ரா, அன்ஷிதா, சுனிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். Salman Khan Death Threat: நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்.. பாலிவுட் திரையுலகமே பரபரப்பு.! 

அன்ஷிதா - அர்னவ் (Anshidha Arnav) சர்ச்சை:

இந்நிலையில், நடிகை அன்ஷிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கொரோனா காலகட்டத்தில் அர்னவுடன் சேர்ந்துகொண்டு அவரின் முதல் மனைவியான சீரியல் நடிகையை கண்ணீர் மல்க புலம்பவைத்த ஆடியோ ஒன்று வெளியானது. அதேபோல, கர்ப்பிணி என்றும் பாராது அர்னவ் அவரை தாக்கியதாகவும் புகார் எழுந்தது. தற்போது அந்த நடிகைக்கு குழந்தையும் பிறந்துவிட்ட நிலையில், அர்னவ்-அன்ஷிதா தங்களின் திரை வாழ்க்கையை மெல்லமெல்ல இழக்கத்தொடங்கினர். தற்போது இருவரும் பிக் பாஸ் இல்லத்திற்குள் வந்த நிலையில், அர்னவ் இரண்டாவது வாரத்தில் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட நடிகை அன்ஷிதா, தன் மீது தவறு இல்லை என இன்று வரை கூறி வருகிறார். அவரின் மிரட்டல் ஆடியோ வெளியாகி வைரலாகி இருந்த போதிலும், பிக் பாஸ் இல்லத்தில் டாஸ்க் ஒன்றில் சோஷியல் மீடியாவில் என்னைப்பற்றி பலரும் அவதூறாக எழுதிவிட்டார்கள் என கூறுகிறார். இதனால் இன்றைய நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும்போது, அவர் என்ன பேசினார் என்பது தெரியவரும் என எதிர்பார்க்கபடுகிறது. அதற்கான ப்ரோமோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.

அர்னவ் - அன்ஷிதா சர்ச்சை குறித்த விஷயம் தொடர்பாக பேசப்பட்ட காணொளி:

ரியாவை ஜால்ரா என கலாய்க்கும் தீபக்:

(The above story first appeared on LatestLY on Nov 06, 2024 03:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).