GOAT Box Office Day 5: 300 கோடி வசூலை நெருங்கும் தி கோட்.. 4வது நாள் வசூல் எவ்வளவு? விவரம் உள்ளே.!

தி கோட் திரைப்படம் வெளியாகி 5 நாட்கள் கடந்த நிலையில் வசூல் குறித்த அதிகாராப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

GOAT Box Office Day 5: 300 கோடி வசூலை நெருங்கும் தி கோட்.. 4வது நாள் வசூல் எவ்வளவு? விவரம் உள்ளே.!
Vijay (Photo Credit: @Instagram)

செப்டம்பர் 10, சென்னை (Cinema News): நடிகர் விஜய் (Thalapathy Vijay) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து தளபதி விஜய் டபுள் ஆக்‌ஷனில் மிரட்டியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (The Greatest of All Time) படம் செப்டம்பர் 5ம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Bigg Boss Season 8 Tamil: பிக் பாஸ் சீசன் 8 தமிழ்; விஜய் சேதுபதிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

தி கோட்: இந்தப் படத்தில் புதுமையாக டி ஏஜிங் லுக் தொழில்நுட்பத்தை கையாண்டிருக்கிறார்கள். அதன்படி விஜய்யை ரொம்பவே இள வயதில் காண்பித்திருக்கிறார்கள். மேலும், சர்ப்ரைஸ் கேமியோக்களும் இப்படத்தில் உள்ளன. டிக்கெட் முன்பதிவிலேயே பெரும் சாதனை படைத்த இப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் தி கோட் படத்தின் 4வது நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 4வது நாளில் மொத்தமாக 288 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சணா கல்பாத்தில் தெரிவித்துள்ளார்.

(The above story first appeared on LatestLY on Sep 10, 2024 12:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).