Good Bad Ugly: ஹாலிவுட் நடிகர்களுக்கே சவால் விடும் தல அஜித் குமாரின் புதிய லுக்.. வைரலாகும் புகைப் படம்..!
அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் புதிய புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நவம்பர் 28, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (Ajith Kumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இந்த படத்திற்கு பின், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் இணைந்துள்ளார். தொடர்ந்து ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்த படத்தில் நடிகர் பிரசன்னா நடிக்கின்றார் என அவரே கூறியுள்ள நிலையில் படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. Divya Prabha’s Nude Scene: பிரபல நடிகை திவ்யா பிரபாவின் நிர்வாணக் காட்சி லீக்.. இணையத்தில் வீடியோ வைரல்.!
அதில் அஜித் குட் பேட் அக்லி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் அஜித் மாஸ் லுக்கில் ஹாலிவுட் நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு புதியத் தோற்றம் கொண்டிருக்கிறார். அஜித், இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார்.
குட் பேட் அக்லி லுக்கில் அஜித்:
#Goodbadugly Gangster film in #Thalaajith pic.twitter.com/oPXOVfRROA
— Ms Tamil Movies🌠 (@MsTamilMoviess) November 28, 2024
(The above story first appeared on LatestLY on Nov 28, 2024 01:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

