Independence Day Releases: இன்று திரையரங்குகளில் வெளியான படங்கள்.. விடுமுறையை கொண்டாடுங்கள்..!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களின் பட்டியலை கீழே விரிவாக காணலாம்.

Independence Day Releases: இன்று திரையரங்குகளில் வெளியான படங்கள்.. விடுமுறையை கொண்டாடுங்கள்..!
Movies (Photo Credit: @CinemaWithAB X)

ஆகஸ்ட் 15, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை. ஆனால், அடுத்த ஆறு மாதம் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ்க்கு காத்திருக்கின்றன. சமீபத்தில், கமல் நடித்த இந்தியன் 2, ராயன் படம் வெளியான. அந்த வகையில் இன்று சுதந்திர தினம் விடுமுறை என்பதால் இன்றைய நாளில் புதிய திரைப்படங்கள் (Aug 15th Release Tamil Movies) சில வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் வெளியான திரைப்படங்களை இங்கு காணலாம்.

தங்கலான் (Thangalaan): நடிகர் விக்ரம், தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் (Thangalaan) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் இன்று வெளியானது. Sivakarthikeyan's 'Amaran' Independence Day Special: போர் செல்லும் வீரன்.. தேசபக்தி பாடலுடன் வெளியான அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ..!

டிமாண்டி காலனி 2 (Demonte Colony 2): இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அஜய் ஞானமுத்து. அவர் கடந்த 2015-ம் ஆண்டு திரைக்கு வந்த டிமாண்டி காலனி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரது இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'டிமான்டி காலனி' பாகம் 2 திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.

ரகுதாத்தா (Raghu Thatha): இந்தி திணிப்பை மையக்கருவாக கொண்டு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “ரகு தாத்தா”. இத்திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்திலும், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.

(The above story first appeared on LatestLY on Aug 15, 2024 12:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).