KH 233: கமல், வினோத் இணையும் புதிய படம்.. ட்ராப் ஆகியதா? இல்லையா?.!

கமலின் 233வது படத்தை ஹச் வினோத் இயக்குகிறாரா? இல்லையா? என்பதனைப் பற்றி காணலாம்.

KH 233: கமல், வினோத் இணையும் புதிய படம்.. ட்ராப் ஆகியதா? இல்லையா?.!
KH 233 (Photo Credit: @rameshlaus X)

ஜனவரி 29, சென்னை (Chennai): உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஹச் வினோத் இணைந்து புதிய படம் உருவாக இருந்தது. அந்த படத்தை KH 233 என்றனர். இந்த நிலையில் தான் KH 233 திடீரென ட்ராப் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. கமலின் கால்ஷீட் பிரச்சினை என்றும் ஹச் வினோத்தின் கதை அவருக்குப் பிடிக்கவில்லை எனவும் சொல்லப்பட்டன. ஆனால் தற்போது வெளியான தகவலின் படி KH 233 இன்னும் ட்ராப் ஆகவில்லை எனத் தெரிகிறது. UPI Digital Bus Ticket: இனி யுபிஐ மூலம் பஸ் டிக்கெட்.. சென்னை மக்கள் குஷி..!

அதாவது அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்கும் KH 237 படத்தில் கமல் கமிட்டாகியுள்ளார். மேலும் KH 237 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் போதே, ஹச் வினோத் இயக்கத்தில் நடிக்கவும் கமல் பிளான் செய்துள்ளாராம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்பாகவே தக் லைஃப் ஷூட்டிங் வேகமாக முடிந்துவிடும்.

(The above story first appeared on LatestLY on Jan 29, 2024 03:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).