UPI Digital Bus Ticket (Photo Credit: Pixabay)

ஜனவரி 29, சென்னை (Chennai): இன்று வெளியே செல்லும் பொழுது யாரும் கையில் பணத்தை எடுத்துச் செல்வதில்லை. அனைவரும் டிஜிட்டல் கட்டண முறையை தான் பயன்படுத்தி வருகின்றனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. இதனால் அனைவரும் சுலபமாக கட்டணங்களை செலுத்தி வருகின்றோம். Lay Off In Swiggy: 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஸ்விகி.. ஊழியர்கள் கவலை..!

இந்நிலையில் இனி யுபிஐ வசதியை பயன்படுத்தி சென்னை மாநகரப் பேருந்துகளில் டிக்கெட் பெறும் வசதி சோதனை முறையில் அமல் செயப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பல்லாவரம் பேருந்து பணிமனையின் கீழ் இயங்கும் பேருந்துகளில் யுபிஐ (UPI) மற்றும் கார்டுகளை பயன்படுத்தி டிக்கெட் வழங்கப்படுகிறது. அதாவது தொடுதிரை வசதி கொண்ட புதிய கருவியின் மூலம் பயணிகள் ஏறும் மற்றும் இறங்கும் இடங்களை தேர்வு செய்து டிக்கெட் வழங்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் செயல்பாடுகளை பொறுத்து சென்னை நகரில் உள்ள மற்ற பணிமனைகளில் உள்ள பேருந்துகளில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது.