Jayam Ravi-Aarti Divorce: ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு.. சமரச பேச்சுவார்த்தை நடத்தச் சொன்ன நீதிமன்றம்..!

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்த வழக்கில் சமரச தீர்வு மையத்தில் இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jayam Ravi-Aarti Divorce: ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு.. சமரச பேச்சுவார்த்தை நடத்தச் சொன்ன நீதிமன்றம்..!
Jayam Ravi - Aarthi (Photo Credit: @Instagram)

நவம்பர் 15, சென்னை (Cinema News): ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த ரவி, தனது அருமையான நடிப்பால் ஜெயம் ரவியாக (Jayam Ravi) உருவெடுத்தார். தொடர்ந்து தன் அண்ணனுடன் பல்வேறு படங்களில் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தார். கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனில், பொன்னியின் செல்வனாக நடித்து அனைவரின் மனதையும் வென்றார். ஆனால் அதன் பின் வெளியான படம் எதுவும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. சொல்லப்போனால் நீண்ட காலமாக வெற்றி படத்தை கொடுக்காமல் உள்ளார். பூமி படத்தில் ஆரம்பித்த தோல்வி இறைவன், அகிலன், சைரன், பிரதர் என்று அவரை படுத்தி எடுத்து வருகிறது. பொன்னியின் செல்வன் என்னதான் வெற்றி படமாக இருந்தாலும், அதில் பல நடிகர்கள் நடித்ததினால், அவரின் தனிப்பட வெற்றியாக அது பார்க்கப்படுவதில்லை.

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து: இதற்கிடையே நடிகர் ஜெயம் ரவி கடந்த செப்டம்பர் 9ந் தேதி, தனது எக்ஸ் தள பக்கத்தில், நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்கான எடுக்கப்பட்டு முடிவு என அறிக்கை வெளியிட்டு இருந்தார். தனது பிறந்த நாள் அன்று, மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். Bigg Boss Tamil Season 8: தீபக் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜாக்குலின்: கதறி அழுத பரிதாபம்..‌ வைரல் ப்ரோமோ உள்ளே.!

இதனிடையே ஆர்த்தி, தான் பரஸ்பர விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும், தான் ஜெயம்ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நான அவரை தனியாக சந்தித்து பேச அனுமதி கேட்டுள்ளேன். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறி தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் இன்றே சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

(The above story first appeared on LatestLY on Nov 15, 2024 01:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).