Bigg Boss Tamil Season 8: தீபக் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜாக்குலின்: கதறி அழுத பரிதாபம்..‌ வைரல் ப்ரோமோ உள்ளே.!

பிக் பாஸ் 8 ஸ்கூலில் நடந்து கொண்டிருக்கும் பஞ்சாயத்தை பார்ப்பவர்கள் காது வலிக்குது பாஸ் என்கிறார்கள்.

Bigg Boss Tamil Season 8: தீபக் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜாக்குலின்: கதறி அழுத பரிதாபம்..‌ வைரல் ப்ரோமோ உள்ளே.!
Bigg Boss Tamil Season Promo (Photo Credit: @VijayTelevison X)

நவம்பர் 13, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டது. இதில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள்தான் கலந்து கொண்டனர். இதில் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டாவது ஆக அர்னவ் வெளியேற்றப்பட்டார். மூன்றாவது வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டு இருந்தார். அடுத்த ஐந்தாவது வாரமான நேற்றைய நாளில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டது. காரணம் இந்த முறை 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களால் பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது அதிக போட்டியாளர்கள் உருவாகி விட்டனர். Kanguva Movie Review: ஞானவேல் ராஜாவின் கனவு பலிக்குமா? "கங்குவா எப்படி இருக்கு?" - திரைவிமர்சனம்‌..!

இன்றைய நாளுக்கான ப்ரோமோ: பிக் பாஸ் வீடு இந்த வாரம் பிக் பாஸ் பள்ளியாக மாறியுள்ளது. இதற்கு தலைமை ஆசிரியராக வர்ஷினி, ஆசிரியராக ஜாக்குலின் இருந்து வருகிறார். நேற்றைய தினத்தில் காதல் நாடகத்தினால் பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டுள்ளனர். அதற்கு ஆசிரியர்கள் தவறாக பேசியதால் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக கடைசி நேரத்தில் ஆசிரியரே மாணவர்கள் முன்பு முட்டி போடும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றைய ப்ரோமோவில் ஜாக்குலின், தீபக்கிடம் நேற்று நான் அப்படி பேசவில்லை, ஒருவேளை உங்களை காயப்பட்டிருந்தால் மன்னித்துவிடுங்கள் என கைக்கூப்பி மன்னிப்பு கேட்டு காலில் விழுகிறார். மேலும் ஜாக்குலின் தனியாக வந்து மைக்கை வீசிவிட்டு கதறி அழுகிறார்.

இன்றைய நாளுக்கான ப்ரோமோ:

(The above story first appeared on LatestLY on Nov 14, 2024 03:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).