Jayam Ravi's Siren: ஜெயம் ரவியின் அதிரடி நடிப்பில் வெளியாக உள்ள புதிய படம்... கம்பேக் கொடுப்பாரா?.!
நடிகர் ஜெயம் ரவியின் சைரன் திரைப்படத்தின் வெளியிட்ட தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 23, சென்னை (Chennai): ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த ரவி, தனது அருமையான நடிப்பால் ஜெயம் ரவியாக (Jayam Ravi) உருவெடுத்தார். தொடர்ந்து தன் அண்ணனுடன் பல்வேறு படங்களில் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தார். கடந்த ஆண்டு வெளியான பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வனில், பொன்னியின் செல்வனாக நடித்து அனைவரின் மனதையும் வென்றார். ஆனால் அதன் பின் வெளியான படம் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
சொல்லப்போனால் நீண்ட காலமாக வெற்றி படத்தை கொடுக்காமல் உள்ளார். பூமி படத்தில் ஆரம்பித்த தோல்வி இறைவன், அகிலன் என்று அவரை படுத்தி எடுத்து வருகிறது. பொன்னியின் செல்வன் என்னதான் வெற்றி படமாக இருந்தாலும், அதில் பல நடிகர்கள் நடித்ததினால், அவரின் தனிப்பட வெற்றியாக அது பார்க்கப்படுவதில்லை. Actor Vikranth’s Son In Cricket Team: தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் தேர்வாகியுள்ள விக்ராந்தின் மகன்.. பிரபலங்கள் வாழ்த்து..!
சைரன்: இந்நிலையில் ஜெயம் ரவிக்கு புதிய படம் ரிலீஸ் ஆக உள்ளது. அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்கியராஜ் எழுதி இயக்கும் சைரன் (Siren) என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் (G. V. Prakash Kumar) இசையமைத்துள்ளார். தற்போது இந்த படமானது பிப்ரவரி 16ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரிலேயே தனது அதிரடி நடிப்பை இரு வேடங்களில் ஜெயம் ரவி வெளியிட்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். மேலும் இப்படத்தின் மூலம் அவர் கண்டிப்பாக கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Jan 23, 2024 07:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

