ஜனவரி 23, சென்னை (Chennai): நடிகர் விக்ராந்த் (Vikranth) தமிழ் சினிமாவில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான 'கற்க கசடற' என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடிகை மானசா என்பவரை 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யஸ்வந்த் மற்றும் விபின் விநாயகர் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். Google Pay Charges on Mobile Recharge: கூகுள் பே பயன்படுத்துவோரின் கவனத்திற்கு.. மொபைல் ரீசார்ஜ்களுக்கு இனி 3 ரூபாய் கட்டணம்.!!

தற்போது விக்ராந்தின் மூத்த மகனான யஸ்வந்த் (Yashwanth), தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் (U-14 Tamil Nadu Cricket Team) தேர்வாகி உள்ளார். இந்த தகவலை விக்ராந்த் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் விக்ராந்தின் மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விக்ராந்த்தும் நன்கு கிரிக்கெட் விளையாட தெரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.