Indian 2 Trimmed By 12 Minutes: ரசிகர்களின் விமர்சனம்.. இந்தியன் 2 படத்தை 12 நிமிடங்கள் குறைக்க அதிரடி முடிவு!

எதிர்மறை விமர்சனங்கள் எதிரொலியால், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் 12 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Indian 2 Trimmed By 12 Minutes: ரசிகர்களின் விமர்சனம்.. இந்தியன் 2 படத்தை 12 நிமிடங்கள் குறைக்க அதிரடி முடிவு!
Indian 2 (Photo Credit: @LycaProductions x)

ஜூலை 17, சென்னை (Cinema News): ஆண்டவர் என்றழைக்கப்படும் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன் (Indian). கமல் 2 வேடங்களில் நடித்த இந்த படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, செந்தில் கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் 28 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான இந்தியன் படத்தின் 2ம் பாகமாக இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீஸானது. Amaran Release: தல அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்.. அமரன் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு..!

படத்தினைப் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து கலவையான விமர்சனங்களைக் கொடுத்தனர். குறிப்பாக படத்தின் நீளம் குறித்து பலபேர் கருத்து தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக 180 நிமிடங்கள் நீளம் கொண்ட ‘இந்தியன் 2’ படத்தில் 11 நிமிடங்கள் 51 வினாடிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த வெர்ஷன் நாளை முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Jul 17, 2024 06:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).