Kanguva Update: கங்குவா படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸ்? துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்..!
‘கங்குவா’ படத்தின் முதல் பாடலை சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜூலை 15, மும்பை (Cinema News): ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்ஸ் (Studio Greens), வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உபளபதியின் யுவி கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா (Kanguva). ரூ.350 கோடி செலவில், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில், வெற்றி பழனிச்சாமியின் ஒளிப்பதிவில், நிஷாந்த் யூசுப்பின் எடிட்டிங்கில், சிறுத்தை சிவா இயக்கத்தில் படம் தயாராகி இருக்கிறது.
கங்குவா: படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சூர்யா, பாபி டியோல், திஷா பதானி, நடராஜன் சுப்பிரமணியம், ஜகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், கோவை சரளா, மாரிமுத்து, தீபா, வெங்கட் ரவி, ராகவேந்திரா, பி.எஸ் அவினாஷ், கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். சென்னை, கொடைக்கானல், பாண்டிச்சேரி, கோவா, பேங்காங், ஸ்ரீலங்கா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடைபெற்று, தற்போது வெளியீடுக்கு தயாராகி வருகிறது. Kedarnath Temple Cannot Be Made in Delhi: டெல்லியில் கேதார்நாத் கோவில்.. எதிர்ப்பு தெரிவிக்கும் பூசாரிகள்..!
முதல் பாடல்: இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு பின் விரைவில் திரையில் தமிழ், கன்னடம், ஹிந்தி உட்பட 38 மொழிகளில் உலகளவில் ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகிறது. படம் வெளியீடுக்கு முன்பே ரூ.500 கோடி அளவிலான வருமானத்தை பெற்றுள்ளது. இந்தப்படத்தின் போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ, டீசர் உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ‘கங்குவா’ படத்தின் முதல் பாடலை சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 15, 2024 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

