ஜூலை 15, புதுடெல்லி (New Delhi): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனித தலங்களில் ஒன்றான கேதார்நாத் கோவிலில் (Kedarnath Temple) சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் கோவிலாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவில் நடை திறக்கும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து ஈசனை தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் குளிர்காலங்களை தவிர மீதமுள்ள ஆறு மாதங்களில் மட்டுமே கோவில் திறக்கப்பட்டு இருக்கும். TN Weather Update: வீசப்போகும் சூறாவளி.. மீனவர்களுக்கு அலர்ட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
டெல்லியில் கேதார்நாத் கோவில்: இந்நிலையில் டெல்லியில் மற்றுமொரு கேதார்நாத் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பல தரப்பு சாமியார்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரேவின் வேண்டுகோளின் பேரில், ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி மும்பையில் உள்ள 'மாதோஸ்ரீ'யில் பேசியதாவது, "நாங்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகிறோம். 'புன்யா' மற்றும் 'பாப்' ஆகியவற்றை நாங்கள் நம்புகிறோம். 'விஷ்வாஸ்காட்' மிகப்பெரிய பாவம் என்று கூறப்படுகிறது, உத்தவ் தாக்கரேவுக்கும் அதுதான் நடந்தது. அவர் என்னை அழைத்து வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இந்த விஷயத்தில் என்னால் எதுவும் செய்ய இயலாது. என்னை மன்னித்து விடுங்கள். கேதார்நாத்தில் நடந்த 228 கிலோ தங்கம் பற்றிய மோசடியை அனைவரும் அப்படியே விட்டு விட்டனர். என்று கூறியுள்ளார்.
கேதார்நாத் மோசடி: மும்பையைச் சேர்ந்த பெயர்கூற விரும்பாத தொழிலதிபர் ஒருவர் கொடுத்த நன்கொடையின் மூலம், கேதார்நாத் கோயிலின் கருவறைக்கு சுமார் 23,777.800 கிராம் தங்கம் பயன்படுத்தி தங்க முலாம் பூசப்பட்டது. ஆனால் கேதார்நாத் கோயிலின் தீர்த்த புரோகித் மற்றும் சார்தாம் மகாபஞ்சாயத்தின் துணைத் தலைவரான சந்தோஷ் திரிவேதி, "கருவறையின் சுவர்களில் தங்கம் தற்போது பித்தளையாக மாறியிருக்கிறது. தங்க முலாம் பூசுவதற்கு பதிலாக, பித்தளை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் சுமார் ரூ.125 கோடி மோசடி நடந்திருக்கிறது" என வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
VIDEO | Swami Avimukteshwaranand Saraswati, Shankaracharya of Jyotirmath was at 'Matoshree' in Mumbai on request of Shiv Sena (UBT) Chief Uddhav Thackeray. Here's what he said interacting with the media.
"We follow Hindu religion. We believe in 'Punya' and 'Paap'. 'Vishwasghat'… pic.twitter.com/AZCJaDfHhi
— Press Trust of India (@PTI_News) July 15, 2024