ஜூன் 24, புதுடெல்லி (New Delhi): டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் மாடல்களில் அல்ட்ராஸ் (Altroz)-ம் ஒன்று. இந்த கார் மாடலுக்கு கூடுதல் சிறப்பை சேர்க்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அல்ட்ராஸ் ரேசர் (Altroz Racer) எனும் சூப்பரான பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த பதிப்பே தற்போது ஷோரூம் விற்பனைக்காக வந்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக ஆர்1 (R1), ஆர்2 (R2) மற்றும் ஆர்3 (R3) என மூன்று விதமான தேர்வுகளில் கிடைக்கும். International Fairy Day 2024: "அடடா ஒரு தேவதை வந்து போகுதே இந்த வழியில் புதிதாய்.." சர்வதேச தேவதை தினம்..!
இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கும். மேலும் எட்டு ஸ்பீக்கர்கள், வாஷருடன் கூடிய பின்புற வைப்பர், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல் க்ரூஸ் கனட்ரோல் ஆகியவற்றையும் அது கொண்டிருக்கும். பாதுகாப்பு அம்சங்களாக ஆர்1 வேரியண்டில் ஆறு ஏர் பேக்குகள், முன்பக்கத்தில் பனி மின் விளக்குகள், மழை பொழிந்தால் தானாக வைப் செய்யும் வைப்பர்கள் மற்றும் நான்கு கதவுகளுக்கும் பவர் ஜன்னல்கள் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதன் விலை ரூ. 9.49 லட்சம் ஆகும்.