Madras HC On Thangalaan Release: தங்கலான் பட வெளியீட்டில் சிக்கல்.. சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை..!
தங்கலான் படத்தை வெளியிடும் முன்பு ரூ.1 கோடி பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்று படத்தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 12, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் பல்வேறு கெட்டப்களில் ஒருவர் நடித்துள்ளார் என்றார் அது கண்டிப்பாக சியான் விக்ரம் (Chiyaan Vikram) தான். இதன் காரணமாகவே இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் வசூல் ரீதியாக வெற்றியைப் பெறவில்லை என்றாலும் இவருடைய நடிப்பானது அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே இவர் நடிப்பில் வெளியான எந்த படமும் வெற்றியைப் பெறவில்லை. கடைசியாக இவருக்கு வெளிவந்த படம் தான் பொன்னியின் செல்வன் 2. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், அதில் பல நடிகர்கள் நடித்திருந்ததினால், அவரின் தனி வெற்றியாக பார்க்கப்படவில்லை.
தங்கலான்: தொடர்ந்து நடிகர் விக்ரம், தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் (Thangalaan) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் இப்படமானது வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. Kanguva Trailer Out: "அலறவிடும் காட்சிகள்" சூர்யாவின் கங்குவா படத்தின் அட்டகாசமான ட்ரைலர் காட்சிகள் இதோ..!
சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை: இந்த நேரத்தில் தங்கலான் பட வெளியீட்டில் ஒரு சிக்கல் வந்திருக்கிறது. அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் வாங்கிய கடனில் இன்னும் ₹10.35 கோடி ரூபாய் திரும்ப செலுத்தாதது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. அந்த உத்தரவில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வெளிவர இருக்கக்கூடிய தங்கலான் படத்தை வெளியிடுவதற்கு முன்பு ஆகஸ்ட் 14ம் தேதி ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் அதன் பின் படத்தை வெளியிட்டுக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Aug 12, 2024 05:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

