ஆகஸ்ட் 12, சென்னை (Cinema News): ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்ஸ் (Studio Greens), வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உபளபதியின் யுவி கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா (Kanguva). ரூ.350 கோடி செலவில், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில், வெற்றி பழனிச்சாமியின் ஒளிப்பதிவில், நிஷாந்த் யூசுப்பின் எடிட்டிங்கில், சிறுத்தை சிவா இயக்கத்தில் படம் தயாராகி இருக்கிறது.
கங்குவா: படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சூர்யா, பாபி டியோல், திஷா பதானி, நடராஜன் சுப்பிரமணியம், ஜகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், கோவை சரளா, மாரிமுத்து, தீபா, வெங்கட் ரவி, ராகவேந்திரா, பி.எஸ் அவினாஷ், கே.எஸ் ரவிக்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். சென்னை, கொடைக்கானல், பாண்டிச்சேரி, கோவா, பேங்காங், ஸ்ரீலங்கா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடைபெற்று, தற்போது வெளியீடுக்கு தயாராகி வருகிறது. TV Actress VJ Chitra Death Case: சின்னத்திரை நடிகை சித்ரா மரண விவகாரம்; கணவர் ஹேம்நாத் விடுதலை.!
இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு பின் விரைவில் திரையில் தமிழ், கன்னடம், ஹிந்தி உட்பட 38 மொழிகளில் உலகளவில் ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகிறது. படம் வெளியீடுக்கு முன்பே ரூ.500 கோடி அளவிலான வருமானத்தை பெற்றுள்ளது. இந்தப்படத்தின் போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ, டீசர் உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கங்குவா ட்ரைலர்: இந்நிலையில் கங்குவா படத்தின் இயக்குநர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. மிரட்டலான காட்சிகளில் தோன்றியுள்ள நடிகர் சூர்யா முற்றிலும் எதிர்பார்க்காத ஒரு தோற்றத்தில் ரசிகர்கள் முன் காட்சியளித்துள்ளார். முழு ட்ரைலருமே பிரம்மாண்டமாக இருக்கிறது. போர், ரத்தம், பகை, பழிக்குப்பழி பலி என ஒட்டுமொத்த ட்ரைலரும் பார்வையாளர்களை மிரட்டும் வகையில் அமைந்துள்ளது.