Maharaja: மகாராஜா படத்தின் வெற்றி விழா.. இயக்குநர் நித்திலன்க்கு பிஎம்டபுள்யூ பரிசளித்த விஜய் சேதுபதி..!

மகாராஜா படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

Nithilan Saminathan (Photo Credit: @BhimROCKY X)

அக்டோபர் 07, சென்னை (Cinema News): தமிழ்த் திரையுலகில் சாதாரண பாத்திரங்களில் நடித்து முக்கிய இடத்தைப் பிடித்த நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படம், மகாராஜா (Maharaja) இப்படத்தை ’குரங்கு பொம்மை’ இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் (Nithilan Saminathan ) இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் அபிராமி, மம்தா மோகன் தாஸ், நட்டி நட்ராஜ், அனுராக் கஷ்யப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 20 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப் படம், திரையரங்குகளில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 100 கோடி கிளப்பில் இணைந்துள்ள நிலையில் படம் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. Bigg Boss Tamil Season 8: விஜய குருநாத சேதுபதி-ஐ வரவேற்று மகிழ்ந்த பிக் பாஸ்; வீட்டை இரண்டாக பிளந்தது எதனால்?.. தொடங்கியது பிக் பாஸ் சீசன் 8..!

இந்த நிலையில், தயாரிப்பாளர் குழுவான சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனுக்கு பிஎம்டபுள்யூ காரை பரிசளித்திருக்கின்றனர். இது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், ``இந்த அற்புதமான பரிசுக்கு சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோருக்கு மிக்க நன்றி. இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி." எனப் பதிவிட்டிருக்கிறார்.

இயக்குநர் நித்திலன்க்கு பிஎம்டபுள்யூ பரிசளித்த விஜய் சேதுபதி:

 

View this post on Instagram

 

A post shared by Nithilan Saminathan (@dir_nithilan)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement