Venom The Last Dance: மிரளவைக்கும் காட்சிகளுடன் வெனம் தி லாஸ்ட் டான்ஸ்: அக்.25 முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில்.. விபரம் உள்ளே.!

உங்கள் அபிமான திரையரங்குகளில் வரும் அக்.25ம் தேதி, மார்வெல் காமிக்ஸ் ரசிகர்களின் ஆவலை அதிகரிக்கும் வகையில் வெனம் தி லாஸ்ட் டான்ஸ் திரைப்படம் வெளியாகிறது.

Venom The Last Dance (Photo Credit: @MCU_Portal X)

அக்டோபர் 19, சென்னை (Cinema News): கெல்லி மார்க்கெல் இயக்கத்தில், நடிகர்கள் டாம் ஹெர்டி, ஜூனோ டெம்பிள், ரைஹஸ் இபான்ஸ், சிவிட்டல் ஏஜியோபோர், பெக்கி லு ஆகியோர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் வெனம் தி லாஸ்ட் டான்ஸ் (Venom The Last Dance). பாபியன் வாக்னர் ஒளிப்பதிவில், மார்க் சங்கர் எடிட்டிங்கில், டான் டெக்கான் இசையில் படம் தயாராகி இருக்கிறது.

ஐமேக்ஸ் 3டி தரத்தில் படம் வெளியாகிறது:

மார்வெல் ஸ்டுடியோஸின் பல படைப்புகளில் ஒன்றான வெனம் திரைப்படத்தில் பல பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், இதன் இறுதி பாகமாக வெனம் தி லாஸ்ட் டான்ஸ் படம் உருவாகி இருக்கிறது. இப்படத்திற்கு படக்குழு மிகப்பெரிய உழைப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில், படம் 3 டி ஐமேக்ஸ் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 110 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை படத்தின் தயாரிப்பு மற்றும் விளம்பர பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. Ramya Pandian Marriage: யோகா டீச்சரை கரம் பிடிக்கும் ரம்யா பாண்டியன்.. அதுவும் அடுத்த மாதமே திருமணமாம்!!

புக்கிங் தொடங்கியது:

சர்வதேச அளவில் பல பிராந்திய மொழிகளிலும் இப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடும் பணிகள் இறுதி பெற்றுள்ளன. தமிழ் மொழியிலும் வெளியாகும் இப்படத்தை 3டி தொழில்நுட்ப முறையில் பார்ப்பது அதன் அனுபவத்தை தனித்துவமாக்கும்.அக்.25 அன்று வெளியாகவுள்ள படத்தினை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். படத்தின் டிக்கெட் புக்கிங்-கும் ஆன்லைனில் நேற்றில் இருந்து தொடங்கி இருக்கிறது.

டிரைலர் வீடியோ உங்களின் பார்வைக்கு:

மிரளவைக்கும் காட்சிகளுடன் வெனம் தி லாஸ்ட் டான்ஸ்:

ரிஷப் பண்ட் வைத்து விளம்பரத்தில் இறங்கிய தயாரிப்பு நிறுவனம்:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement